• JUST IN | சுட சுட

ஐரோப்பாவுக்கு சுற்றுப் பயணம்: தொடங்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!





அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவியேற்புக்கு பின் முதல் முறையாக 8 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த 8 நாட்கள் சுற்றுபயணத்தைத் தொடர்ந்து பிரிட்டனில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதன்பின் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை, பிரஸ்ஸல்சில் நடைபெற உள்ள நேட்டோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் ஜோ பைடன் பங்கேற்கவுள்ளார்.

மேலும் ஜூன் 16-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஜெனிவாவில் சந்திக்க இருக்கிறார் என்று அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபருடனான ஜோ பைடனின் சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டரம்ப் பணிபுரிந்த நேரத்தில் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அது தற்போது ஜோ பைடனின் இந்த 8 நாட்கள் பயணத்தால் சீர்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :