• JUST IN | சுட சுட

டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடைநீக்கம்: அதிபர் ஜோ பைடன் உத்தரவு!





அமெரிக்காவில் முந்தைய அதிபரான டொனால்ட் டிரம்ப் சீன செயலிகளான டிக் டாக், வி சாட் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவை ரத்து செய்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

சீன மொபைல் செயலிகளான டிக் டாக், வி சாட் போன்றவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், அவற்றிற்கு தடை விதித்தார். புதியதாக இந்த செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே டிரம்ப்பின் ஆணைக்கு நீதிமன்றங்கள் தடை விதித்தன. இந்த நிலையில் அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம், டிக் டாக், வி சாட் போன்ற சீன செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா என்பதை கண்காணிக்கும் படியும் பைடன் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :