• தினம் ஒரு சுண்டல்

பட்டர் பீன்ஸ் சுண்டல்


வி. பவானி, மதுரை

தேவையானவை:

உரித்த பட்டர் பீன்ஸ் – 1/2 கி, வெங்காயம் - 1, மிளகாய் வற்றல் - 4, தேங்காய் துருவல் - 1 கப், தனியா - 2 டீஸ்பூன், உளுந்த பருப்பு - 1 டீஸ்பூன், கடலை பருப்பு - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், தூள் பெருங்காயம் - 1 டீஸ்பூன், பூண்டு - 1 பல், கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை:

பட்டர்பீன்ஸ்ஸை குக்கரில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் எண்ணெய் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, மிளகாய் வற்றல், பூண்டு, தனியா, உளுந்த பருப்பு, கடலை பருப்பு போட்டு வறுத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மீண்டும் அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்து, சிறிதாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். அவை வதங்கிய பின் அதனுடன் வேக வைத்த பட்டர்பீன்ஸ், பொடி செய்து வைத்த பூண்டு, கடலை பருப்பு, உளுந்த பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்த தூளை போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் பெருங்காய தூள், தேங்காய் துருவல் போட்டு நன்றாக கிளறவும். மணமணக்கும் பட்டர்பீன்ஸ் சுண்டல் ரெடி.

இது புரோட்டின் சத்து நிறைந்த ஒரு சுண்டல்.

Comments

Rajasekaran says :

Very nice and healthy food.

GNANASEKARAN M says :

Tasty food madam

Swathika says :

Healthy food madam

GJ JANASAIRANJAN says :

Good snacks Aunty...

Kanna says :

I will try this Madam, Very nice explanation

kala Hari says :

Excellent, looks yummy. Very nice receipe. Expecting more recipes from you ,Mrs. Bhavani Natarajan

Gayathri Sundharasekaran says :

மிகவும் எளிமையான செய்முறை. சத்தான உணவு. மிகவும் பயனுள்ள பகிர்வு.நன்றி அம்மா.

Rama Harish says :

Have tasted it..... Very tasty and healthy.... A bowl full of nutrition.... A must try recipe....

Vani Ganapathy says :

Nice Healthy food..

வீ. கணேஷ் says :

பவானி அவர்களே தங்களின் பட்டர்பீன்ஸ் சுண்டல். அருமை வாழ்த்துக்கள்.

வீ. கணேஷ் says :

Very tasty and healthy food Congratulations. வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :