• SPARKLES | மினுமினு

கொரோனா நிவாரண செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் Vs ஆமீர்கான்!


- ஆதர்ஷ் தேவராஜன்.





கொரோனா நோயாளிகளுக்கு நிதி திரட்டும் செஸ்.காம் அமைப்புக்கு உதவும் நோக்கில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன், வருகிற ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 13) செஸ் போட்டியில் விளையாடவிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமீர் கான்.

தற்போது கொரோனா 2-ம் அலை இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்களும், தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்டி உதவி வருகிறார்கள்.

அந்த வகையில் கொரோனாவால் பாதிகப்பட்ட செஸ் விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் `செக்மேட் COVID` என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது தனியார் அமைப்பான செஸ்.காம். ஜூன் 13-ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான், ஐந்து முறை உலக சாம்பியனும், இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடவிருக்கிறார்.

இதுதொடர்பாக செஸ்.காம் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது:

செஸ் விளையாட்டை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான தருணம் காத்திருக்கிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் செஸ் விளையாட்டுப் பிரியர். படப்பிடிப்பின் ஓய்வுவேளையில் சதுரங்க விளையாட்டில்தான் அதிக ஆர்வம் காட்டுவார். அவர், இந்திய கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்துடன் ஜூன் 13 அன்று விளையாடவிருக்கிறார்.

-இவ்வாறு செஸ்.காம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நடிகர் அமீர்கான் சதுரங்க விளையாட்டை அதிகம் விரும்பும் நபர். அவருடன் படங்களில் பணிபுரிந்த துணை நடிகர்கள் பலரும் பட ஷூட்டிங்கின் இடைவேளையில் அவர் செஸ் விளையாடியதை பல முறை மீடியாக்களில் தெரியப்படுத்தியுள்ளனர். தவிர ஏற்கனவே விஸ்வநாத ஆனந்துடன், அமீர்கான் செஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது..




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :