• JUST IN | சுட சுட

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் நடால், ஜோகோவிச் மோதல்!





பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி போட்டிக்கு,ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால் மற்றும் செர்பிய சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர். இதனால்,அரை இறுதியில் கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் இப்போது நடந்து வருகிறது.இதில்,பிரஞ்சு ஓபன் டென்னிஸின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார். அதாவது, இந்தப் போட்டியின் கால் இறுதி போட்டியில் செர்பிய சாம்பியன் ஜோகோவிச்,இத்தாலி இளம் வீரர் மேட்டோ பிரட்னீயை எதிர்கொண்டார். எனினும்,ஜோகோவிச் தனது சிறப்பான ஆட்டம் மூலமாக இறுதியில் 6-க்கு 3, 6-2, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோல் இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரை,13 முறை வென்ற ரபேல் நடால்,அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 14 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி போட்டியில் ரபேல் நடாலுக்கும் ஜோகோவிச்சுக்கும் இடையே கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :