• GLITTERS | பளபள

கல்யாணம்லாம் வேஸ்ட்: மலாலாவின் அதிரடி பேட்டி!


சாந்தி கார்த்திகேயன்





பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் பள்ளிச் சிறுமியான மலாலா யூசுப்சாய் மீது தாக்குதல் நடத்தினர். அவர் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததால் இந்த தாக்குதல் நடந்தது. இதில்

படுகாயமமுற்ர மலாலா, பின்னர் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட்டு அல் அறுவை சிகிச்சைகளுக்குப் பின் குணமடைந்தார்.

லண்டனிலும் பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மலாலாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது வருக்கு வயது 17.

இந்நிலையில் லண்டனில் வசித்து வரும் மலாலா அண்மையில் பிரிட்டனின் பிரபல பத்திரிகையான ”வோக்” இதழின் அட்டைப் படமாக இடம் பெற்றார். அந்தப் படம் வைரலாகப் பரவியது. மேலும் அந்த இதழுக்கு மலாலா பிரத்தியேக பேட்டி அளித்திருந்தார். அதில் மலாலா தன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் பற்றிப் பகிர்ந்திருந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிக் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் மலாலா பதிலளித்துள்ளார்.

அதில் திருமணம் பற்றி மலாலா சொல்லியிருந்த அவரது கருத்து பாகிஸ்தானில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

‘’ஒரு பெண்ணுக்கு திருமணம் அவசியமா?” என்ற கேள்விக்கு மலாலாவின் பதில்:

’’கல்யாணம்லாம் வேஸ்ட்! வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு ஆண் துணை தேவையானால், அதற்குத் திருமண காகிதத்தில் கையொப்பம் இடத் தேவையில்லை” என்று மலாலா கூறியுள்ளார்.

மலாலாவின் இந்த கருத்து, பழமைவாத பாகிஸ்தானின் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி இருக்கிறது. இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரான மலாலா, பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதாகக் குற்ரம் சாட்டியுள்ளனர் ’’லண்டனில் வசிப்பதால், மலாலாவுக்கு பாரம்பரம் புரியவில்லை.. மேற்கத்திய கலாச்சாரத்தை நகலெடுக்கிறார்’’ என்கின்றனர். புனிதமான திருமண பந்தத்தைக் கொச்சைப் படுத்தும்படி மலாலா பேசியதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாகிஸ்தானில் இஸ்லாமியத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

கலி காலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :