• JUST IN | சுட சுட

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பயணம்: தமிழக அரசாணை வெளியீடு!





தமிழகத்தில் மே 7-ம் தேதி திமுக தலைமியிலான ஆட்சியமைத்து, மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் தமிழக மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்பதற்கான உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். அந்த வகியில் இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் துணிக்குச் செல்லும் மற்றும் ஒருவரும் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்படி மாற்றுத் திறனாளிகள் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது..

இதுகுறித்து தமிழக அரசு வெளீயிட்டுள்ள அறிக்கை:

2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நல சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத் திறனாளிகள், மற்றும் அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் ஆகியோர் தமிழக அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம். ஆனால், இச்சலுகையை பெற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :