• JUST IN | சுட சுட

வானில் அதிசயம்: இன்று மாலை கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு!





இன்று மாலை வானியல் அதிசயமாக, கங்கண சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சூரியனை சுற்றி நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கக்கூடிய, அரிய கங்கண சூரிய கிரகணம் இது ஆகும்.

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரன், சூரியனை மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படுகிறது. பல அதிசயங்கள் நிறைந்திருக்கும் பேரண்டத்தில், இந்த் சூரிய கிரகணம் மற்றொரு அதிசயமாகும்.

ஒவ்வொரு ஆண்டும், 1 முதல் 3 சூரிய கிரகணங்கள் நிகழ்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்றைய கிரகணத்தின்போது, சந்திரனால் சூரியனை முழுவதும் மறைக்க இயலாது என்பதால், சூரியனை சுற்றி நெருப்பு வளையம் இருப்பது போன்று அற்புதமாய்க் காட்சியளிக்கும். ஆனால், இந்தியாவில் இந்த கிரகணத்தை காண இயலாது. இந்நிகழ்வை அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் சிறிது நிமிடங்களுக்குக் காணமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய நேரப்படி இந்த கங்கண கிரகணம், இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி, மாலை 6.41 மணிக்கு நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :