• JUST IN | சுட சுட

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கட்டணம் நிர்ணயம் : மத்திய அரசு அறிவிப்பு!





கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட ஒரு டோசுக்கு 780 ரூபாயும், கோவாக்சின் ஊசி போட 1,410 ரூபாயும், ஸ்புட்னிக் வி ஊசி போட 1,145 ரூபாயும், தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கலாம். இந்த விலை நிர்ணயத்தில் வரியும், சேவை கட்டணம் 150 ரூபாயும் அடங்கும்.

சேவை கட்டணமாக 150 ரூபாயை விட அதிகமாக வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் மருத்துவமனைகள் அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததையடுத்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :