• TRENDING | பர பர

ஏ.ஆர். ரஹ்மான் மாஸ்க் : விலை என்ன தெரியுமா? அடேங்கப்பா!





ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மகன் அணிந்திருந்த மாஸ்க் மற்றும் அதன் அம்சங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, பல பிரபலங்களை தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றானர். அப்படி ஒரு சில பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் அனைவரின் பேச்சு பொருளாக மாறிய நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகனும் ஏ.ஆர்.அமீனும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பதை விட, அந்த புகைப்படத்தில் ரகுமானும் அவரது மகன் அமீனும் அணிந்திருக்கும் மாஸ்க் குறித்துதான் வைர லாகி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் அணிந்திருக்கும் மாஸ்க் விலை என்ன?

அது எல்.ஜி. நிறுவனத்தின் எல்ஜி பூரிகேர் மாஸ்க் LG PuriCare™ Wearable Air Purifier என்றும், அதன் விலை 10ஆயிரத்துக்கு மேல் என்றும் சொல்லப் படுகிறது. 99.99% பாக்டீரியா நீக்கம் செய்யப்படுவதால் ம் 99.99% மஇந்த மாஸ்க் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாமாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :