• JUST IN | சுட சுட

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19-ல் தொடக்கம்: பிசிசிஐ அறிவிப்பு!





14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி, ரசிகர்கள் இன்றி தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆரம்பித்த நிலையில், விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலவரையின்றி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 30 போட்டிகள் மீதமுள்ளது. இந்த போட்டிகள் எல்லாம் எப்போது எங்கு நடத்தப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தி இருப்பது, ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த வருடத்தின் இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடரும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடக்க இருப்பதால் பிசிசிஐ என்ன முடிவு செய்யும் என்பது பொறுத்திருந்து தான் தெரியவரும். கடந்த சீசனில் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை கடந்த ஆண்டு போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் செப்டம்பர் 19 ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :