• JUST IN | சுட சுட

இந்திய தேர்தல் கமிஷனர் புதிதாக . நியமனம்!





இந்திய தேர்தல் கமிஷனராக உ.பி.யைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனுப் சந்திரா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவி வகிக்கிறார். மற்றபடி ஏற்கனவே ராஜிவ்குமார் தேர்தல் கமிஷனராக உள்ளார். காலியாக உள்ள மற்றொரு தேர்தல் கமிஷனர் பதவிக்கு அனுப் சந்திரா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அனுப் சந்திரா பாண்டே 1984 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். உ.பி. முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றினார். 2019-ல் ஓய்வு பெற்றார். தற்போது தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவியை 2014 வரை வகிப்பார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :