• JUST IN | சுட சுட

ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் : தமிழக அரசு உத்தரவு!





ஜூன் 14 முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. எனினும் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.. ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன.. பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஜூன் 14 முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் " மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளது. மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது.. மேலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் உள்ளிட்ட மற்ற நலத்திட்ட பணிகளும் தொடங்கப்பட உள்ளது..

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் 14-ம் தேதி முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென அறிவுறுத்தப்டுகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதை உறுதி செய்ய வேண்டும்.." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :