• JUST IN | சுட சுட

சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் இன்று முதல் இயங்கும்.





போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாகன தணிக்கை பணிகளையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வடபழனி சிக்னல் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தளர்வுக்கு பிறகு போக்குவரத்து அதிகமாகி விட்டதால் அதனை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். எனவே இன்று முதல் அனைத்து சிக்னல்களும் சென்னையில் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறினார்.

ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்களுக்கு எந்த விதமான சோதனைகளுமின்றி உரிய நேரத்தில் அனுப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :