• JUST IN | சுட சுட

சொத்துக்களை குவிக்கும் சுந்தர் பிச்சையின் காதல் மனைவி.. மொத்த சொத்து மதிப்பு இது தான்..





சுந்தர் பிச்சை ஒரு கணினி பொறியாளர் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி. மதுரையில் பிறந்த இவர் கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓ எஸ் உள்ளிட்ட கூகுளின் சில தயாரிப்புகள் இவரின் தலைமையில் நல்ல வெற்றியை கண்டன. அதன் பிறகு ஜீ மெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் போன்ற பிற கூகுளின் தயாரிப்புகளின் நிர்வாக பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். ஆண்டு வருமானம் மட்டுமே பல்லாயிரம் கோடிகளைத் தாண்டி உள்ள இவரின் புகழை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இவரது மனைவி அஞ்சலியை பற்றி பலருக்கும் தெரியாது.

அவரும் சும்மா இல்லை, மாதத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு தகுதி பெற்றவர் தான். ஐஐடியில் படிக்கும் போது சுந்தர் பிச்சைக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவரது மனைவி அஞ்சலிக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் சுந்தர் பிச்சை தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற போது செல்போன் போன்றவை இல்லாத காலகட்டம். இருவரும் ஈமெயிலில் மட்டுமே காதலை வளர்த்து வந்துள்ளனர்.

அதன் பிறகு இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர். சுந்தர் பிச்சை ஒரு பக்கம் ஆயிரம் கோடிகளில் சம்பளம் வாங்கி வந்தால், இன்னொரு பக்கம் அவரது மனைவி அஞ்சலியும் அதற்கு சற்றும் குறைந்தவரல்ல. மாதம் ஒரு கோடி சம்பளம் என வருடத்திற்கு 12 முதல் 15 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். இதனால் கடந்த சில வருடங்களில் மட்டும் சுந்தர் பிச்சை குடும்பத்தின் சராசரி வருமானம் 79 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் தற்போதைய சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு மட்டும் 5,900 கோடி என்கிறார்கள்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. பழமொழியை சிறப்பித்தவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :