• JUST IN | சுட சுட

பிரபல நட்சத்திர ஓட்டல் மூடப்பட்டது: நிதி பற்றாக்குறை காரணம்!





இந்தியாவின் மிகப் பிரபலமான ஓட்டலான ஹயாத் ரீஜன்சி ஓட்டல் நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பிரபலமான ஹயாத் ரீஜன்சி ஓட்டல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஹயாத் ஓட்டல் கார்ப்பரேஷன் அமைப்புக்குச் சொந்தமானவை ஆகும். உலகம் முழுவதும் பல ஓட்டல்களை நடத்தும் இந்த நிறுவனம், இந்தியாவில் ஹயாத், ஹயாத் செண்டிரிக், ஹயாத் ரீஜன்சி உள்ளிட்ட 8 ஓட்டல்களை நடத்தி வருகிறது.

இந்த குழுமம் 1982 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் உணவகங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக நட்சத்திர உணவு விடுதிகள் அடியோடு பணி இன்றி உள்ளன. இதில் ஹயாத் ரீஜன்சி ஓட்டலும் ஒன்றாகும்.

இந்நிலையில் இந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ஹயாத் ரீஜன்சி ஓட்டல்களின் உரிமையாளரான ஆசியன் ஓட்டல்ஸ் நிறுவனத்திடம் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நடைமுறை செலவுக்கு நிதி இல்லாமல் உள்ளது. எனவே அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ஹயாத் ரீஜன்சி மும்பை உணவகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை உணவகம் மூடப்பட்டிருக்கும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்கனவே தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற விட்கோ நிறுவனம் மூடப்பட்ட நிலையில் தற்போது மும்பையில் பிரபல உணவகம் மூடப்பட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

ஓட்டல் சர்வர்கள் மற்றும் கிளீனர்கள் , தனியார் பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், பழைய பேப்பர் எடுப்பவர்கள், சின்ன சின்ன கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போன்ற அநேகம் பேர் எந்த வருமானமும் இன்றி வாடுகிறார்கள். பல நல்ல உள்ளங்கள் இவர்களுக்கு உணவு அளிக்கிறார்கள். கூச்சப்பட்டு வராதிருப்பவர்களும் உண்டு. தீர்வு : இறைவன் கருணை ஒன்றே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :