• தினம் ஒரு சுண்டல்

முப்பயறு சுண்டல்


ஆர். பிருந்தா இரமணி, மதுரை

தேவையானவை:

கொத்துக்கடலை - 1/2 கப்

தட்டைப்பயறு - 1/2 கப்

பாசிப்பயறு - 1/2 கப்

உப்பு - தேவையானது

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

மேலே தூவ:

மேல் பொடி - 1 டேபிள் ஸ்பூன் ( கடலைப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன், மல்லி விதை 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 15-- இவைகளை வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பவுடராகத் திரித்து வைக்கவும்)

செய்முறை:

பயறு வகைகளைத் தனித் தனியே தண்ணீர் விட்டு இரவு முழுதும் ஊற வைக்கவும். மறு நாள் காலையில் ஒவ்வொன்றையும் தனித் தனியே வேக விட்டு எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போடவும். வெடித்தவுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போடவும். பொரிந்தவுடன் வேக விட்டு வைத்திருக்கும் பயறு வகைகளைத் தண்ணீரை வடித்து விட்டுப் போடவும். தேவையான உப்பு போட்டுக் கலக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும். இப்போது மேலே தூவும் பொடி, தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்து பரிமாறவும். சுவையான முப்பயறு சுண்டல் ரெடி! பின்குறிப்பு: * ஏதாவது ஒரு பயறு வகை மட்டும் போட்டுச் செய்யலாம். * மாங்காய் இருந்தால் மெலிதான துண்டுகளாக நறுக்கிப் போடலாம்.

Comments

ஜெயா சம்பத் says :

தேங்காய், மாங்காய் சேர்த்த சத்தான முப்பயறு சுண்டல் மிகவும் ருசியாக இருக்கும். நல்ல ரெசிபி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :