• தினம் ஒரு சுண்டல்

பனங்கிழங்கு சுண்டல்


என்.கோமதி நெல்லை-7

தேவை :- பனங்கிழங்கு 5 மிளகு பொடி 2டீஸ்பூன் தேங்காய் துருவல் 1டேபிள் ஸ்பூன் உப்பு திட்டமாக நல்லெண்ணெய் 1டீஸ்பூன் கடுகு,உளுந்தம் பருப்பு 1டீஸ்பூன் கறிவேப்பிலை 5எண்ணம் செய்முறை :-பனங்கிழங்கை, தோலுரித்து வேக வைக்கவும்.பின் அதன் நார் நீக்கி, சின்ன சதுரங்களாக நறுக்கவும்.அதை குக்கரில் போட்டு, மூழ்கும் வரை மூணு விசில் வேகவிடவும்.அப்போ தான் சுண்டல் மிருதுவாக இருக்கும்.பிரஷர் அடங்கியதும் திறந்து, வடிகட்டவும். மிதமான தீயில், வாணலியை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பனங்கிழங்கு துண்டுகள், மிளகு பொடி, உப்பு சேர்த்து கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை தூவி, கிளறி தீயை அணைக்கவும். வித்தியாசமான, மணமான சுண்டலுடன் டீ குடிக்கலாம் மாலையில்.....
Comments

R. Brinda says :

நல்ல வித்தியாசமான சுண்டல். செய்து பார்க்கிறேன்.

R. Brinda says :

நல்ல வித்தியாசமான சுண்டல். செய்து பார்க்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :