• தினம் ஒரு சுண்டல்

மொச்சை பயறு கடலைமாவு சுண்டல்


ஆர். ராதிகா, திருவான்மியூர்

தேவையானவை: மொச்சை பயறு - 1 கப்

வெங்காயம்- 1 கப் பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய்_- 2 நறுக்கியது.

இஞ்சி - சிறு துண்டு ( துருவியது)

கடலைமாவு - 1/4 கப்

செய்முறை:

மொச்சை பயறை முதல் நாள் இரவே ஊறவைத்து, அடுத்த நாள் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். கடலைமாவில் சிறிது மிளகாய்தூள், உப்பு, சிறிது நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணை ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய், இஞ்சி வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்து வடிகட்டிய மொச்சை பயறு சேர்த்து, நன்றாக வதக்கவும். பின் கடலைமாவு கரைசல், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறி கெட்டியானதும் இறக்கி வைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

Comments

J. Sitalakshmi says :

Good idea. A different recipe.Jice

Mala Vasudevan says :

Worth trying. Healthy too

Mala Vasudevan says :

Worth trying. Healthy too

Hemalatha says :

Different Sundal. It will be crispy and crunchy I think

Satish says :

looks yummy@

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :