• JUST IN | சுட சுட

கமலா ஹாரிஸ் சென்ற விமானம் கோளாறு: உடனடியாக தரையிறக்கம்!





அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது முதல் சர்வதேச பயணமாக குவாத்தமாலாவுக்கு தனி விமானத்தில் கிளம்பினார். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், நேற்று தனது முதல் சர்வதேச அரசு பயணமாக மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவுக்கு அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம்

மீண்டும் வாஷிங்டன் விமானப்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து சில மணி நேரத்திற்குப் பிறகு, மாற்று விமானம் மூலம் கமலா ஹாரிஸ் குவாத்தமாலா புறப்பட்டுச் சென்றார். தான் நலமாக இருப்பதாகவும் சிறு பிரார்த்தனை மட்டும் செய்ததாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். தனது முதல் சர்வதேச பயணத்தில் குவாத்மாலா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்குச் செல்லும் கமலா ஹாரிஸ் சட்ட விரோத குடியேற்றத்திலுள்ள ஆபத்துகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து மக்களிடையே உரையாற்றவுள்ளதாக அமெரிக்க அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :