• GLITTERS | பளபள

தமிழகத்தில் புதிய முதல்வரின் முதல் 30 நாட்கள் ஆட்சி!


கட்டுரை: ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் (ஜூன் 7) சரியாக ஒரு மாதமாகிறது. இந்த 30 நாட்களில் இந்த புதிய அரசு என்ன செய்திருக்கிறது.. அல்லது செய்யவில்லை? விரிவாகப் பார்ப்போம்..

திமுக தலைவராக மு க ஸ்டாலின் ஆனதும் அவரது அடுத்த இலக்கு முதல்வர் நாற்காலி ஆகத்தான் இருந்தது. அந்த வகையில் 2021 தேர்தலுக்கு 2020 ஜனவரி முதலே ஸ்டாலின் திட்டமிட்டு நிதானமாக தேர்தல் வியூகம் அமைத்தார். வேட்பாளர் தேர்வு தொகுதி பங்கீடு கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட சிறு சிறு மனக்கசப்புகளை பேசி சரி செய்தது என்று தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனத்துடன் நடந்து, ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆனார்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக மே 7-ம் தேதி பதவி ஏற்ற சமயத்தில் கொரோனா 2-ம் அலை உக்கிரத்தில் இருந்தது. அதனால் அவரது உடனடி கவனம் முழுவதும் கொரோனாவைக் கட்டுபடுத்தும் விஷயத்தில்தான் இன்றுவரை இருக்கிறது. அமைச்சர்களை மாவட்டம் மாவட்டமாக கண்காணிக்க நியமித்தார். மருத்துவக் குழு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக்குழு ஓய்வுபெற்ற முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி ஆர் பூர்ணலிங்கம் தலைமையில் கோவிட் தடுப்பு சிறப்பு குழு என்று எல்லோரின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி அவர் நடவடிக்கை இருக்கிறது

கொரானா தொற்றில் சென்னைதான் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது இறப்பு எண்ணிக்கையும் சென்னையில்தான் கூடுதலாக இருந்தது திடீரென கோவையில் கொரோனா தொற்றும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில்கூட திமுக வெற்றி பெறவில்லை. இருந்தாலும் கோவையில் ஸ்டாலின் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆக்சிஜன் தட்டுப்பாடு மருத்துவ நிலையங்கள் வாசலில் ஆம்புலன்ஸ் கியூ வரிசை இடுகாட்டில் பிணங்களை எரிக்க காத்திருப்பு இப்படி பல கசப்பான அனுபவங்களை ஆட்சியில் அமர்ந்த இரண்டு வாரங்களில் முதல்வர் ஸ்டாலின் அனுபவித்தார்.

ஆக்சிஜன் சப்ளை, தடுப்பூசி என்று எல்லாவற்றிற்கும் அவர் மத்திய அரசை நம்பி இருக்க வேண்டியிருந்தது திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலுவை அனுப்பி மத்திய அரசுடன் பேசி போதிய அளவு ஆக்ஸிஜன் தடுப்பூசி வழங்க கோரிக்கை மனு தந்தார் இதுதவிர முதல்வர் ஸ்டாலின் தனியாக இதே கோரிக்கைக்காக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினார் தற்போது அவரது நடவடிக்கையால் தமிழகத்தில் ஓரளவு நிலைமை சமாளித்து வருகிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊரடங்கு தேவையா என்று கேட்ட ஸ்டாலின் இப்போது ஊரடங்கு அவசியம் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் இது தடுப்பூசிக்கும் பொருந்தும். இப்போது அவர் கொரோனா 3-ம் அலை பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டார்.

ஆட்சிக்கு வந்த கையோடு முழு ஊரடங்கும் கடையடைப்பும் என்று அமல்படுத்தியது - வர்த்தக சங்கத்திற்கு பெரும் அதிர்ச்சி! வர்த்தக சங்கத் தலைவர் விக்கிரம ராஜாவின் மகன் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்பதால், இதை எதிர்த்து எந்த கருத்தும் சொல்ல முடியவில்லை. அதேசமயம் ஸ்டாலின் இப்போது விமர்சன அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு சமாதானமாக எல்லாவற்றையும் பேசித் தீர்க்கவே விரும்புகிறார்.

பள்ளி இறுதித் தேர்வு ரத்து பற்றியும் எல்லா கட்சித் தலைவர்களுடனும் கலந்து ஆலோசித்தார் ஆளுங்கட்சி, கூட்டணி கட்சிகள் ஆகியவை பள்ளி தேர்வு நடத்தவேண்டும் என்று சொல்ல, பிஜேபி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்வை ரத்து செய்ய யோசனை கூறியது.. 60% பெற்றோர்களும்கூட தேர்வு வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்கள். ஆனால், தமிழக மருத்துவ குழு தற்போது தடுப்பூசி மருந்து பற்றாக்குறை என்பதால் மாணவர்களுக்கு தடுப்பூசி போட இயலாததைச் சுட்டிக்காட்ட, பள்ளி இறுதி தேர்வை ரத்து செய்தார் முதல்வர் ஸ்டாலின்

கூடவே கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு உள்பட பொதுத்தேர்வுகளை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார் இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுக்கு பதில் குழு அமைப்பது சரியான அணுகுமுறையா என்பது இந்த குழுக்களின் முடிவு வெளிவரும் போது தான் தெரியும் அதேசமயம் இதெல்லாம் பயனுள்ள யோசனையா என்ற கேள்வியும் தற்போது வரத் துவங்கிவிட்டது

நீட் தேர்வு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் தான் நடந்து வருகிறது இந்நிலையில் நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து ஆகுமா என்பது பலரது மனதில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற அன்று கொரானா நிவாரணம் 4000 ரூபாய் அறிவித்து முதல் தவணையாக 2000 ரூபாய் இதேபோல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு நகரப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் தனியார் மருத்துவமனையில் கொரான நோயாளிகளுக்கு கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற அறிவிப்பை வெளியீட்டு கூட்டணி கட்சிகளின் பாராட்டை பெற்றார்

ஆனால் நிதியமைச்சர் 4000 கோடி மக்களிடம் கடன் கேட்டு விண்ணப்பிக்கிறார் இது தவிர அரசின் வருமானத்தில் ஒரு ரூபாயில் 22பைசா வாங்கிய கடனுக்கு வட்டியாக போய்விடுகிறது இது தவிர்க்க முடியாதது நாங்களும் கடன் வாங்குவோம் என்று சொல்லியிருக்கிறார். பால்வள துறை அமைச்சர் பால் விலை குறைப்பால் 270 கோடி நஷ்டம் என்கிறார் போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்தாலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ’’கோ பேக் மோடி என்று டிவிட் செய்து டிரெண்டிங் ஆக்கியது. அதனால் முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் போனபோது ’’கோ பேக் ஸ்டாலின்’’ என்று பாரதிய ஜனதா ட்விட் செய்து அதை ட்ரெண்டிங் ஆக்கியது திமுக பதிலுக்கு ’’நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’’ என்று ஸ்டாலினுக்கு ஆதரவாக டிவிட் செய்து அதை ட்ரெண்டிங் ஆக்கினார்கள்.

நிதியமைச்சர் சொன்ன ஒன்றியம் என்ற வார்த்தை சர்ச்சையானது ஆனால் ஒன்றியம் என்பது சர்ச்சைக்குரிய வார்த்தை அல்ல அது அரசியல் நிர்ணய சட்டத்திலேயே யூனியன் என்ற வார்த்தை இருக்கிறது அதை அவர் தமிழில் ஒன்றியம் என்று சொன்னார்

மத்திய அரசு அதிமுக கூட்டணியில் இருந்தபோதே தமிழக அரசுக்கு பெரிதாக நிதி ஆதாரங்களை வாரி வழங்கவில்லை. இப்போது திமுக கிட்டத்தட்ட பாரதிய ஜனதாவின் எதிரிக்கட்சி. எனவே மத்திய அரசு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை எந்த அளவுக்கு பரிசீலிக்கும் என்பது கேள்விக்குறிதான் அதேசமயம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும் இதே கோரிக்கைகளுக்கு பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் கல்விக் கடன் ரத்து, நகை கடன் ரத்து, எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் முதல்வர் ஸ்டாலினுக்கு காத்திருக்கிறது தற்போது கொரானா பாதிப்பு என்பதால் எதிர்க்கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் அவை இந்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கேள்வி எழுப்பும்.

மேலும் முதல்வர் முன்னால் இப்போதுள்ள உடனடி சவால் என்று பார்த்தால், வலுவான எதிர்க்கட்சியான அதிமுக-வையும் தோழமை இல்லாத மத்திய அரசசையும் சமாளித்தாக வேண்டும். திமுக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் விரும்பிய முதல்வர் பதவி கிடைத்துவிட்டது என்பது பெரிய விஷயமில்லை. அதை தக்க வைத்துக் கொள்ளவும் தன்னை சிறந்த முதல்வராக நிரூபிக்கவும் அவர் நிறைய உழைக்க வேண்டும்.

இந்த முப்பது நாட்கள் முதல்வருக்கு நிறைய உண்மைகளை புரிய வைத்திருக்கும்.

Comments

L ushakumari says :

Orumatham ponathey theriyavill antha alaviru korona nammai akiramaippu seithu irranthathu vizhuthalam muzhithal korona korona than analu. Nam mudalavarin 30 Nal sevai. Makkaulukka aver parthu parthu seiyum pain migavum paratavum varaverkavum kudiyathu valarga thodarga mudhalvari. Pani

கேஆர்எஸ் சம்பத் says :

இறையன்பு போன்ற நேர்மையான அதிகாரிகளை அவர் நியமித்ததின் மூலம் அவர் சிறந்த ஆட்சியை வழங்குவார் என்று புரிந்துகொள்ளலாம். சிக்கல்களைக் கடந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :