• TRENDING | பர பர

செல்லப்பிராணி கரப்பான் பூச்சியா? ஆச்சரியப்பட்ட டாக்டர்!





பொதுவாக வீடுகளில் செல்லப்பிராணியாக பூனை, நாய், பறவை என ஆபத்தில்லாத சிறிய உயிரினங்களை வளர்ப்பார்கள். ஆனால் கரப்பான் பூச்சியை செல்லப்பிராணியாக யாராவது வளர்த்துப் பார்த்திருக்கிறீர்களா?

தாய்லாந்தில் கர்தூம் பின் என்ற பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டாக்டர் தானு லிம்பாப்பானாவிஞ்ச் என்பவர், சமீபத்தில் தனது பேஸ்புக்கில் இதுசம்பந்தமான செய்தி மற்றும் புகைப்படத்துடன் ஒரு பதிவு போடவே அது மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பதிவில் அவர் தெரிவித்தது:

ஒரு இளைஞர் தான் செல்லமாக வளர்க்கும் கரப்பான் பூச்சிக்கு அடிபட்டு விட்டதாகச் கொண்டு வந்தார். அதை யாரோ அதை தெரியாமல் மிதித்து விட்டதால், கரப்பான்பூச்சி உயிருக்கு போராடி வருவதாகவும் அதை நான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். கரப்பான் பூச்சிக்கெல்லாம் மருந்து இல்லை என்று நான் சொன்னதும் வருத்தத்துடன் திரும்பிச் சென்றார். அவரிடம் நான் கன்சல்டிங் ஃபீஸ் எதுவும் வாங்கவில்லை. என் இத்தனை வருட சர்வீஸில் கரப்பான் பூச்சியை செல்லப் பிராணியாக வளர்க்கும் யாரையும் நான் இதுவரை பார்த்ததில்லை.

-இவ்வாறு அந்த டாக்டர் பதிவிட்டுள்ளார்.

கரப்பான் பூச்சிக்கு இரக்கப்படும் நபர் குறித்த இந்த பதிவுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளதோடு, பலரும் இதை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

facebook : : https://www.facebook.com/permalink.php?story_fbid=954774495297075&id=100022936005581

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :