• TRENDING | பர பர

அட… `காக்கா முட்டை’ பாய்ஸா இவங்க? வைரலாகும் வீடியோ!





ஆறு வருடத்திற்கு முன் இரண்டு தேசிய விருதுகளை அள்ளிய ‘காக்கா முட்டை’ படத்தில் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டையாக நடித்து பிரபலமான அந்த சிறுவர்களுடன் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லைவ் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘காக்கா முட்டை’ படம் வெளியானது. தனுஷ், வெற்றிமாறன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா வேடத்திலும், இவரது மகன்களாக விக்னேஷ், ரமேஷ் என்ற இரு சிறுவர்களும் நடித்திருந்தனர்.

வசூலில் பெரிய சாதனை படைத்ததோடு, இரண்டு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றது. இப்படத்தில் இரு சிறுவர்களின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில், ‘காக்கா முட்டை’ படம் வெளியாகி தற்போது ஆறு வருடங்கள் முடிவுற்றதைக் கொண்டாடும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சிறுவர்களுடன் லைவ் வந்துள்ளார். அதில் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பேசியுள்ளனர்.

படம் வெளியாகி 6 வருடங்கள் ஆன நிலையில், இரு சிறுவர்களும் பெரியவர்களாக வளர்ந்ததுடன், தற்போது சினிமாவில் நடித்தும் வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Instagram Link : : https://www.instagram.com/p/CPvUoDJp0Cu/

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :