• TRENDING | பர பர

கண்ணிவெடி வேட்டை நடத்திய எலிக்கு பணி ஓய்வு!





கம்போடியா நாட்டில் கண்ணி வெடிகளைக் கண்டறிவதில் உதவிகரமாக இருந்துவந்த எலிக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வந்த 7 வயது நிரம்பிய மகாவா என்ற இந்த எலி, தனது பணியின் போது இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களையும் கண்டறிந்து அசத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த எலியின் மதிக்கத்தக்க இந்த சேவையை பாராட்டி துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மகாவா குறித்து அதன் பராமரிப்பாளர் மலென் கூறும்பொழுது, பார்ப்பதற்கு உருவத்தில் மிகச்சிறியதாக இருந்தாலும் தன் துணிகர செயலால், ஏராளமான மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்ட மகாவாவுடன் பயணித்தது தனக்கு பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :