• TRENDING | பர பர

பெரிய இடி இடித்ததுபோல் சத்தம்… என்னவென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!





மெக்ஸிகோவில், திடீரென விவசாய நிலத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பள்ளம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மெக்ஸிகோவின் பியூப்லா மாகாணத்தில் சாண்டா மரியா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு சுற்றிலும் விவசாய நிலம் அதிகம் அமைந்துள்ள ஒரு இடத்தில் திடீரென இடி இடிப்பதுபோல் பெரிய சத்தம் கேட்டுள்ளது. என்ன சத்தம் என்று பார்ப்பதற்காக அருகிலுள்ள பொதுமக்கள் நிலத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பிரம்மாண்ட சைஸில் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியிருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த நிலத்தில் ஒரு வீடு மட்டும் தனியாக அமைந்துள்ளது. இந்த பிரம்மாண்ட சைஸ் பள்ளமானது, இன்னும் சிறிது பெரிதாக ஏற்பட்டிருந்தால் அருகில் உள்ள அந்த வீடும் உருக்குலைந்து போயிருக்கும். இந்த பள்ளமானது சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், "பள்ளம் ஏற்பட்டுள்ள இந்த இடத்திற்கு கீழே பாறைகள் குறைவாக இருந்தாலும், திடீரென ஏற்பட்ட நீரோட்டம் காரணமாகவும் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்".

பிரம்மாண்ட பள்ளம் குறித்து தகவல் தீயாய் பரவியதையடுத்து, அந்த பகுதி மக்கள் தள்ளி நின்று அந்த பள்ளத்தை பார்த்து செல்கின்றனர்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :