• TRENDING | பர பர

மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இளவரசி டயானாவின் திருமண ஆடை!





இளவரசி டயானா தனது திருமணத்தன்று உடுத்த திருமண ஆடை தற்போது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் ஆலயத்தில் வைத்து இளவரசி டயானா இளவரசர் சார்லஸை மணமுடித்தார். இவர்களின் திருமணத்தின் போது டயானா, தனது திருமண ஆடையாக ivory taffeta என்ற பழங்கால லேசால் வடிவமைக்கப்பட்ட கவுனை அணிந்து வந்திருந்தார். இதை டேவிட் மற்றும் எலிசபெத் இமானுவேல் என்ற ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்திருந்தனர்.

இந்நிலையில், டயானாவின் மகன்களான இளவரசர்களான ஹாரி மற்றும் வில்லியம் ஆகியோர் கண்காட்சிக்காக கடன் கொடுத்துள்ளனர். கென்சிங்டன் பேலஸில் 25 அடி நீளம் கொண்ட இந்த கவுண், தற்போது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :