• JUST IN | சுட சுட

கேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!





கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று தொடங்குவதையொட்டி ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்று மே 21ல் வீசத் தொடங்கியது. இதை தொடர்ந்து, மே 31ல் கேரளாவில் பருவ மழை பெய்யத் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வானிலை மையம் கணித்த தேதியில் கேரளாவில் மழை துவங்கவில்லை.

இந்நிலையில், இன்று கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

மற்ற உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :