• TRENDING | பர பர

பலத்த மழையால் இடிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை! வைரல் வீடியோ!





கடந்த சில நாட்களாக அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது சம்பந்தமான வீடியோ காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அருணாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகரில் தேசிய நெடுஞ்சாலை 415 அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை 59 கி.மீட்டர் நீளம் கொண்டது. பண்டாரதேவாவில் தொடங்கி, அஸ்ஸாமில் இருக்கும் கோபூர் வரை இந்த நெடுஞ்சாலை செல்கிறது.

சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதிதான் தொடர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இது சம்பந்தமான வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/ANI/status/1399366819450818560

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :