• TRENDING | பர பர

கரடியை அடித்து துரத்தி, செல்லப் பிராணியைக் காப்பாற்றிய பெண்!





பொதுவாக செல்லப் பிராணிகள் என்றாலே, அதிக அக்கறையோடு பாதுகாக்கும் காலம் இது. அந்தவகையில் கரடியுடன் சண்டை போட்டு தனது செல்லப் பிராணிகளைக் காப்பாற்றும் பெண் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் கரடி உள்ளிட்ட பல விலங்குகள் இருக்கின்றன. அவற்றில் சில வனப்பகுதியை விட்டு வெளியேறி, அதை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தும் வருகின்றன.

அந்தவகையில், கரடி ஒன்று குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டின் சுவரின் மீதேறி, அங்குள்ள நாயை தாக்க முயற்சிக்கிறது. இதைக் கண்ட அந்த வீட்டில் உள்ள பெண் ஒருவர் உடனே ஓடி வந்து தைரியமாக அந்த கரடியுடன் சண்டை போட்டு, செல்லப் பிராணிகளைக் காப்பாற்றுகிறார். இது சம்பந்தமான வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/55mmbae/status/1399594231405027332

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :