• JUST IN | சுட சுட

முழு ஊரடங்கை முன்னிட்டு இலவசம் – சூப்பர் அறிவிப்பு!





பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் 2 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்துதர டாஃபே டிராக்டர் நிறுவனமும், தமிழக வேளாண் துறையும் கை கோர்த்துள்ளன.

இந்த திட்டத்தை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மேலதுலுக்கன் குளம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் 6 டிராக்டர்களை கொண்டு நவீன முறையில் கோடை உழவு பணி தொடங்கி வைக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வித வருமானமும் இல்லாமல் உழவு பணிகூட செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசும், டிராக்டர் நிறுவனமும் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன.

இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை இலவச உழவு வேண்டும் விவசாயிகள் 1800 4200 100 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

அப்படி தொடர்பு கொண்டு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு இரு நாட்களில் நிலம் உழவு செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

அருமையான திட்டம். வாழ்த்துக்கள்,

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :