• JUST IN | சுட சுட

இன்று கருணாநிதி பிறந்த நாள்; திட்டங்கள் துவக்குகிறார் முதல்வர்!





மறைந்த கருணாநிதியின், 97வது பிறந்த நாளை ஒட்டி, பல்வேறு திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், இன்று(ஜூன் 3) துவக்கி வைக்க உள்ளார்.

* காலை, 9:00 மணி: சென்னை, மெரினா கடற்கரை; கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.

* காலை, 10:30 மணி: தலைமைச் செயலகம்; அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை, இரண்டாவது தவணை, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம்; 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்.

* ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கி வைப்பு.

* கொரோனா நோய் தொற்றால் இறந்த, பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய்; மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவலர், நீதிபதிகள்குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கல்.

* `உங்கள் தொகுதியில் முதல்வர்` திட்ட பயனாளிகள், 10 பேருக்கு, அரசு பயன்களை, முதல்வர் வழங்க உள்ளார்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

கோவில் பணியாளர்களுக்கு உதவுவது குறித்து மெத்த மகிழ்ச்சி. பத்திரிக்கையாளர்கள் ,மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் . காவலர், நீதிபதிகள் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குது பாராட்டுப் பெரும் செயல்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :