• JUST IN | சுட சுட

பறவைக் காய்ச்சல்: சீனாவிலிருந்து உலகில் மனிதர்களுக்குத் தொற்று பரவுமா?





சீனாவில் தோன்றியுள்ள பறவைக் காய்ச்சல் தொற்று, அங்கு 41 வயதான ஒரு மனிதருக்குப் ப்ரவியிருப்பது உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரணம், பறவைக் காய்ச்சல் தொற்று மனிதருக்கு ஏற்படுவது உலகில் இதுவே முதன்முறையாகும்.

H10N3 என்று அறியப்படும் இவ்வகைப் பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் எளிதாகப் பரவி விடாது என்று கருதப்படுகிறது.

ஜீயாங்சூ மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு இந்தக் குறிப்பிட்ட வகையிலான பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கடந்தவாரம் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டதாக அந்நாட்டு அர்சு தெரிவித்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை வேறு யாருக்கும் இந்த வகைபறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்படவில்லை.

சென்ஜியாங் நகரைச் சேர்ந்த நபர் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு மாத காலத்துக்குப் பிறகு அவருக்கு பற்வைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியிருக்கிறது.

"உலகில் இதுவரை H10N3 தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல் இல்லை. இது கோழிகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் மிகவும் அரிதான நிகழ்வு. பெரிய அளவில் இது பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு," என சீன தேசிய சுகாதார ஆணையம் கூறியிருப்பதாக குளோபல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

இப்போதைய நிலையில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்தக் கிருமி பரவுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments

ஆா்.நாகராஜன் says :

இனியும் சீனாவின் அராஜகத்தை உலக நாடுகள் வேடிக்கை பாா்க்கலாமா

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :