• TRENDING | பர பர

இந்த ஸ்கூல் பொண்ணு யாரு? வைரலாகும் நடிகையின் புகைப்படம்!





சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவதோடு அதில் சில வைரலாகியும் விடும். அந்த வகையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டேவின் அழகான பள்ளி பருவ புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2012ல் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘முகமூடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கில் அல்லு அர்ஜுன் உட்பட டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இடம் பிடித்தார்.

தற்போது, மீண்டும் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், சிறு வயதில் பள்ளிச் சீருடையில் க்யூட்டாக சிரித்தபடி இருக்கும் பூஜா ஹெக்டேவின் புகைப்படம் ஒன்று வெளியான நிலையில், இந்த அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :