• TRENDING | பர பர

வேட்டி கட்டி மாஸ் காட்டும் சுரேஷ் ரெய்னா! வைரல் வீடியோ!





இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் சின்ன தல என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா வேட்டி கட்டிய வீடியோ காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

IPL ஹீரோவும், CSK அணி ரசிகர்களுக்கு பிடித்த வீரருமான சுரேஷ் ரெய்னா ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பட்டு வேட்டி, சட்டையுடன் மாஸாக ஒரு வீடியோ ஷூட்டில் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஷூட்டில் ‘மாஸ்டர்’ பட வாத்தி கம்மிங் பாடலும் இடம்பெற அதற்குத் தகுந்தாற்போல் ஷூட் நடைபெறுவதுபோல் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

வேட்டியில் சுரேஷ் ரெய்னா இருந்தால் அது எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் வேறு சேர்ந்துள்ளதால், இந்த வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

இவர் தற்போது பகிர்ந்துள்ள இந்த வீடியோ, பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போது ரெய்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதை பதிவிட, ஒரே நாளில் 8 லட்சம் லைக்ஸ்களையும் கடந்து வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram Link : : https://www.instagram.com/p/CPifnO1Bb3N/

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :