• TRENDING | பர பர

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ டிரைலர்! `சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா`!





ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `ஜகமே தந்திரம்` படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம்தான் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அதற்கு ஒரு தனி ரசிகப்பட்டாளம் உண்டு. அதிலும் தனுஷ் கூட்டணி வேறு. இதனால் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, மலையாள நடிகர் லால் ஜோஸ், கலையரசன் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. டிரைலரில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. `சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா` என்று மாஸாக நடிகர் தனுஷ் கூறுவது போல டிரைலர் முடிகிறது.

டிரைலரில் மிரட்டியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜூன் 18 அன்று வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :