• TRENDING | பர பர

மனதிற்கு பிடித்தவரின் படத்தயாரிப்பில் நயன்தாரா!


- ராகவ் குமார்





தமிழ் நாட்டில் நயன்தாராவை பலருக்கு பிடிக்கும். ஆனால் நயன்தாரா மனதிற்கு பிடித்தவர் டைரக்டர் விக்னேஷ் சிவன். தனது மனதிற்கு பிடித்த நயனுக்காக சொந்த படம் தயாரிக்கிறார் விக்னேஷ்.

படத்தின் பெயர் ‘நெற்றிக்கண்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற படத்தின் டைட்டிலை லேடி சூப்பர் ஸ்டாருக்கும் வைத்து உள்ளார். படத்தின் டைரக்டர் மிலந்த் ராவ்.

படத்தின் போஸ்டரில் ஒரு தாமரை பூ மலர்ந்து இருப்பது போலவும், அந்த பூவின் உள்ளே இருந்து, அதிக மேக்கப் இல்லாமல் நயன்தாரா வெளியே வருவது போன்று டிசைன் செய்திருக்கிறார்கள். நயன்தாராவிற்கு முன்னால் ஒரு புத்தகம் விரிந்து உள்ளது. தாமரை, புத்தகம் இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது இது பெண் கல்வியை பற்றி பேசும் படமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எது எப்படியோ விக்னேஷ் சிவன் - நயன்தாரா கூட்டணியில் ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :