தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலவே - நாங்கள்
தீர மின்றிப் பேதையராய் வாழ்ந்திருந்தோம். - ஏதும்
செய்வதறியாதிருந்த போதினிலே - ஒரு
சிங்கநாதம் கேட்டெழுந்தோம் வெண்ணிலவே!
இருளடைந்த நாடென்று எவரோ சொன்னார் - அந்த
இழிவும் ஒரு பெருமை என்று எண்ணி வாழ்ந்தோம்!
அறிவொளியால் இருளகற்ற ஒருவர் வந்தார் - இதை
அமரர் நாடென்றறிந்தோம் வெண்ணிலாவே!
கங்கையெனப் பொங்கிவரும் தண் தமிழினில் - இன்பக்
கவிதை பல புனைந்தளித்தார் வெண்ணிலாவே! - வெற்றிச்
சங்கமூதி முரசறைந்து எழுக என்றார் - இந்தத்
தரையினில் நமக்கு நிகர் இல்லை என்றார்!
கவியரசர் பாரதியின் கவிதை இன்பம் - உன்
கதிரொளியில் காண்பதென்ன வெண்ணிலாவே! - இந்தப்
புவியில் நீயும் தமிழன் என்னப் பிறந்ததுண்டோ? - அவர்
புதுமைக் கவி மது அருந்தி மகிழ்ந்ததுண்டோ?
Comments
says :
says :
says :
கேஆர் எஸ் சம்பத் says :
தண் தமிழ் கவிதை இன்பமளித்தது வெண்ணிலாவே!!