• JUST IN | சுட சுட

`சைக்கிள் பெண்ணின்` தந்தை காலமானார்!





`சைக்கிள் பெண்` என்றழைக்கப்பட்ட ஜோதி என்பவரின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமானார்.

கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கு முதன்முதலாக அமல்படுத்தப் பட்டபோது, நாடு முழுவது புலம்பெயர் தொழிலாளர்கள் கால்ண்டையாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்றது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பீகாரைச் சேர்ந்த மோகன் என்ற ரிக்‌ஷா ஓட்டுனர், உடல்நலம் குன்றிய நிலையில் அவரது மகள் ஜோதி ஒரு ஓட்டை சைக்கிளில் தந்தையை உட்கார வைத்து டெல்லியிலிருந்து பீகாருக்கு பயணித்துச் சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

16 வயது ஜோதி, டெல்லியிலிருந்து பீகாரின் தர்பங்காவிலுள்ள தனது வீட்டிற்கு சைக்கிள் மூலமாக செல்ல 1,100 கி.மீ தூரத்திற்கு,ஆபத்தான பயணத்தைத் தொடங்கினர்.பிறகு,மே 16 அன்று அவர்கள் தங்கள் கிராமத்தை அடைந்தனர்.இதன்காரணமாக,அனைத்து தலைப்புச் செய்திகளிலும் "சைக்கிள் பெண்` என்று அழைக்கப்பட்டு ஜோதி மிகவும் பிரபலமானார். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, தன் டிவிட்டர் பக்கத்தில் ஜோதியைக் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.

இந்நிலையில்,ஜோதியின் தந்தை மோகனுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே அவர் காலமானார். அவரது மறைவுக்கு தர்பங்கா மாவட்ட நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :