• JUST IN | சுட சுட

உருமாறிய இந்திய கொரோனா: டெல்டா என பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு!





உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க வார்த்தைகளை பெயர்களாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. அதன்படி முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு `டெல்டா` எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ஆல்ஃபா என்றும், தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டதற்கு பீட்டா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு `காமா` என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நான்கு வகை உருமாறிய கொரோனாவும் அதிக அளவில் பரவுவதால் அதிக அபாயகரமானவையாக பார்க்கப்படுகின்றன.

இதேபோல் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட வகைக்கு `எப்சிலான்`, என்பது உள்ளிட்ட மேலும் ஐந்து வகைகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு உருமாறிய கொரோனாவுக்கு `கப்பா` என்று பெயரிடப்பட்டுள்ளது.

உருமாற்றம் காணும் கொரோனாவுக்கு அது முதலில் கண்டறியப்பட்ட நாட்டின் பெயரை சூட்டுவதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த நிலையில் கிரேக்க வர்த்தைகளை கொண்டு அழைக்கும் முறையை உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :