• JUST IN | சுட சுட

#BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல்பாஸ்: அரசு அறிவிப்பு!





தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2020-21 கல்வி ஆண்டைப் பொறுத்தவரை 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு எப்போது நடத்தப்படும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இப்போதுள்ள தளர்வற்ற ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நல்ல திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்க கூடாது என்றும் எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக்கூடாது எனவும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :