• TRENDING | பர பர

தளர்வற்ற ஊரடங்கு: நடிகை ஷகிலாவின் நற்செயலுக்கு குவியும் பாராட்டு!





தனது கவர்ச்சியான நடிப்பால் 1995 முதல் ஏராள ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ஷகிலா. ஆனால் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம், தன் கவர்ச்சி இமேஜ் நீங்கப் பெற்றார் ஷகீலா. அந்நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை சென்று இரண்டாம் பரிசு வென்றார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்கள் ஷகீலாவை செல்லமாக ’மம்மி’ என அழைத்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில், நடிகை ஷகிலா ஏழை மக்களுக்கு உணவளிக்கும் செயலில் ஈடுபட்டார். ஷகிலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :