• GLITTERS | பளபள

அரசியல்வாதிகளே... மாறுங்கள்!


- ச. பாலசுப்ரமணியன், (பொதுத்துறை வங்கி ஊழியர் (ஓய்வு))

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின்போது அதிகம் விவாதிக்கப்பட்ட இரண்டு விஷயங்கள்.. ஒன்று இடஒதுக்கீடு பற்றிய கேள்வி.. மற்றொன்று வாரிசு அரசியல் பற்றிய விவாதம் ஆகும்!

இந்த இடஒதுக்கீடு பிரசினையும் வாரிசு அரசியலும் ஏதோ ஒருவகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே தோன்றுகிறது. வாரிசு அரசியல் பற்றி பேசும்போது – அது உட்கட்சிப் பிரச்சினை.. அந்தந்த கட்சியினர் ஏற்றுக் கொண்டால், அதனை ஏன் பிறர் விமர்சிக்கவேண்டும் என்று சிலர் வாதிட்டனர். கட்சிக்காக உண்மையாக உழைத்து, கட்சியில் படிப்படியாக முன்னேறுவது என்பது எல்லோருக்குமான வழி; அது பாரபட்சமின்றி அனைவருக்கும் பொருந்தும் என்றால், எந்த ஒரு கேள்வியும் எழாது. வாரிசு என்ற ஒரே காரணத்தால் ஒருவருக்கு தடை விதிக்க சொல்லவில்லை. ஆனால், கட்சியில் அவரைவிட திறமையுள்ள மற்ற தொண்டர்களுக்கு தரப்படாத வாய்ப்புகள், வாரிசுகளுக்கு எடுத்த எடுப்பிலேயே வழங்கப் படும்போதுதான் கேள்விகள் எழுகின்றன.

இங்கு, இதனை இட ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்போமாயின், ஒரு ஒற்றுமையைக் காணலாம். முற்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர், அவரது திறமையை எவ்வளவுதான் நிரூபணம் செய்தாலும், குறைவான வாய்ப்புகள்தான் பெறுவர். இவர்கள் கட்சியின் தொண்டர்கள் போல! ஆனால், திறமை குறைந்திருந்தாலும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பல வாய்ப்புகள், பல்வேறு நிலைகளிலும் வழங்கப்படுகிறது. வாரிசு அரசியலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?!

இதில் நகைமுரண் என்னவெனில், வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள்கூட இடஒதுக்கீட்டை எதிர்க்க முன்வர மாட்டார்கள். ஏனென்றால், இன்று, ஜாதி அடிப்படையில்தான் அனைத்து அரசியலும் நடத்தப்படுகிறது என்பது அப்பட்டமான உண்மை! இடஒதுக்கீட்டின் பலனி அனுபவித்தவர்கள் அதை விட்டுக் கொடுக்க முன்வர மாட்டார்கள். இதற்கும் வாரிசு அரசியலுக்கும் என்னெ வேறுபாடு?!

ஒரு காலத்தில், அரசியலில் பரவலாகக் காணப்பட்ட பிராமணர்கள் இன்று அங்கும் குறுகி வருவதைக் காணலாம். காங்கிரஸ் முதல் கம்யூனிஸ்டுகள் வரை, பிராமண சமூகத் தலைவர்கள், எல்லா கட்சிகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த காலம் உண்டு.. பல பெரும், பெரும் தலைவர்களையே, ஜாதி தலைவர்கள் என்ற குறுகிய வட்டத்தில் அடக்கிவிட்ட இக்காலக் கட்டத்தில், தேர்தலில் பிராமணர்கள் முன்னிறுத்தப்படுவது என்பது அரிதிலும் அரிதான ஒன்றாகி வருகிறது.

எல்லா ஜாதிகளும், மதங்களும் தங்களைச் சார்ந்த வேட்பாளர்கள், கட்சிகளால் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக நிர்பந்தித்து வரும் காலகட்டத்தில், பிராமணர்கள் அவ்வாறு எதுவும் பேசக்கூட முடியாது. உடனே ஆட்சேப குரல்கள் கட்சி வித்தியாசம் இன்றி ஒலிக்கத் தொடங்கிவிடும். ஏன், அவர்களால் இந்த கால கட்டத்தில் அரசியலில் பிரகாசிக்க முடியாதா? அதுவல்ல காரணம். பிராமணர்களை ஆதரித்து எந்த அரசியல்வாதியாவது பேசிவிட்டால், அது அவரது ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுவதாக பிறரால் கருதப்பட்டு விடும். அது, பெருங்குற்றம் ஆகி விடும். கட்சிகளும் அதனை விரும்புவதில்லை.தனிப்பட்ட முறையில், அவர்களது ஆதரவை, உதவியை, வழிகாட்டுதலை, பண பலத்தை என எதனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவசியமும் கூட. ஆனால், அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுத்து விட முடியாது. இந்த தேர்தலிலும், இறுதி வேட்பாளர் பட்டியல்களில், எத்தனை பிராமணர்களுக்கு, எந்தெந்த கட்சிகளால் வாய்ப்பு வழங்கப்பட்டது என தேடினால் இந்த உண்மை புரியம்.

அத்துடன் இன்னொன்றும் புலப்படும். தனித் தொகுதிகள் அல்லாத இடங்களில், இவர்கள் அந்த வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனரா என்பதும், பெண்களுக்கு எத்தனை தொகுதிகள் கொடுத்துள்ளனர் என்பதும் இவர்களது உண்மை மன நிலையை எடுத்துக் காட்டும். ஊராட்சித் தேர்தலில், பெண்களுக்கான தொகுதிகளில் வெற்றி பெற்ற பெண்களில் பெருவாரியானோர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதும் அனைவரும் அறிவர். அது போல் சட்ட மன்றத்தில் அவர்கள் குடும்பத்து ஆண்கள் தலையிட முடியாது என்பது இங்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கக் கூடும். இதுதான் இவர்களது இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களின் உண்மை முகம்.

இன்று, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகின்றது. ஓட்டுப் போடும் இயந்திரத்தில், கட்சியின் சின்னத்திற்கு பதில் வேட்பாளரின் புகைப்படத்தினை பதித்தல் என்பது அதில் ஒன்று. கட்சி சின்னத்தின் மீது மட்டும் விசுவாசம் வைத்து, எந்த வேட்பாளராக இருந்தாலும் அவருக்கும் ஓட்டுப் போடும் பாமரனின் வாக்குகள் உங்களுக்கு பறி போகும் அபாயம் இதில் உண்டு. "நோட்டா" அதிக எண்ணிக்கை பெறும் சூழல் அதிகரித்து வருகின்றது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற எண்ணமும் இன்று பரவலாகி வருகிறது. இந்த அரசியல் விழிப்புணர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க, அரசியல்வாதிகளும், கட்சிகளும் தங்கள் நிலையுணர்ந்து, திருந்தியே ஆகவேண்டும் என்பது நிச்சயம்.

Comments

S JEYASREE says :

இக்காலத்துக்கேற்ற அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

Narayanan R says :

தற்போதைய உண்மை நிலையை எடுத்துரைக்கும் கட்டுரை

Apsara begam n says :

நிதர்சனமான உண்மைகள் சார்

Srinivasan Ramabhadran says :

I have read his earlier articles in Kalki magazine and also in Dinamalar. All are socially important and thought provoking.

C S Venugopal says :

Unless voters mindset moves towards conscious voting pattern these sort of influencing factors will be a hindrance to democracy. As rightly said the yesteryear politicians and political movement were based on values unlike of what is said in the article. Congrats Balu for your thought provoking article.

LAKSHMI KUMARI CH says :

Yes, I welcome the suggestion to put the photo of Election candidate on the ballot paper as it is wise to vote for a candidate based on participation in social activities. Because I did the same while voting this time. Didn`t go by party,went by candidate. Only then the party leaders will realise to choose a better deserving and serving candidate.

Sumati Mahalingam says :

Very well and rightly written. Haven`t had the opportunity to read any of his previous articles.

Nagarajan Sundaram says :

Well presented articles. One of main reason for the political party to have chosen few is on account of educated citizen prefer to keep aloof from participation. Rarely, citizens used to express openly fearing that they may be targeted mercilessly in a democratic system

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :