• TRENDING | பர பர

6 மணி நேரத்தில் ரூ. 20 லட்சம் நிதி திரட்டி அனைவரையும் கவர்ந்த Youtubers!





கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. இச்சமயத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்காக, தமிழகத்தைச் சேர்ந்த Youtubers பலர் இணைந்து, ரூ.20 லட்சம் நிதி திரட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு நிதி திரட்டுவதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு YouTubers மற்றும் திரை நட்சத்திரங்கள் இணைந்து `We For O2` என்ற 6 மணி நேர பிரம்மாண்ட தொடர் நேரலை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

கடந்த (மே 29) சனிக்கிழமையன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற்ற இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர்கள், மற்றும் YouTube சேனல்களின் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மூலமாக திரட்டப்பட்ட ரூ.20 லட்சம் நிதியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் தேவைக்காக, Youtubersகள் இணைந்து செய்துள்ள இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருவதோடு, இவர்களின் இந்த முயற்சி பலருக்கும் உந்து சக்தியை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

பாராட்டுக்கள் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :