• TRENDING | பர பர

குழந்தையோடு குழந்தையாக மாறிய நகுலின் க்யூட் புகைப்படம்!





நடிகர் நகுல் தானே ஒரு குழந்தை ரேஞ்சுக்கு மாறி தனது செல்லக்குழந்தையை கொஞ்சும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படம் மூலம் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்து அறிமுகமானவர் நகுல். பின்னர் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து, ‘மாசிலாமணி’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘வல்லினம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தேவயானியின் தம்பியான இவர், நடிகராக மட்டுமில்லாமல் ‘அந்நியன்’, ‘கஜினி’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு தனது காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது கொரோனாவால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நகுல் அவ்வப்போது தனது குழந்தையுடன் கொஞ்சும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, அவரது செல்லக் குழந்தை அகிராவுடன் தானும் ஒரு குழந்தையாகவே மாறி, தலைமுடியில் ஒற்றைக் கொண்டை போட்டு கொட்டாவி விடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த க்யூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :