• JUST IN | சுட சுட

ஆசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்றார் இந்தியாவின் பூஜா ராணி!





துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டி முதலில் டெல்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும் இந்தியாவில் கொரோனா 2-ம் அலை பரவல் காரணமாக அப்போட்டி துபாய்க்கு மாற்றப்பட்டது.

ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி, துபாயில் இப்போது நடந்த ஆசிய குத்துச் சண்டைப் போட்டியில் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் மெளலோனாவை 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதற்கு முன்பு 2019-ல் நடந்த போட்டியிலும் 81 கிலோ பிரிவில் பூஜா ராணி தங்கம் வென்றிருந்தார்.

இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஆறு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :