• TRENDING | பர பர

மழலையின் செயலால் உருகிப்போன நெட்டிசன்கள்! வைரல் வீடியோ!





விலங்குகள் என்றாலே குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயம்தான். விலங்குகளோடு விளையாடி மகிழ்வது, கொஞ்சுவது என குழந்தைகள் செய்கின்ற விஷயங்கள் எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கும். அதேபோல், குழந்தைகள் விலங்குகளுடன் விளையாடும்படியாக வீடியோ வெளியானால் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுவிடும். அந்த வகையில் ஒரு குழந்தை குதிரைகளுக்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ Buitengebieden என்ற பயனரால் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், குழந்தை ஒன்று வரிசையாக கட்டி வைக்கப்பட்டுள்ள குதிரைகளுக்கு முத்தம் கொடுக்கிறது. குழந்தை முத்தம் கொடுப்பதைத் தொடர்ந்து குதிரைகளும் அதை அன்போடு ஏற்றுக்கொள்கிறது.

பார்வையாளர்களின் மனதை நெகிழச் செய்த இந்த வீடியோ, வெளியான இரண்டு நாட்களில் 1 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவைப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

twitter link : : https://twitter.com/buitengebieden_/status/1398674481124630532

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :