• JUST IN | சுட சுட

முன்னாள் அமைச்சர் மிரட்டுகிறார்: காவல் துறையில் துணை நடிகை புகார்!





அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

இந்நிலையில் மணிகண்டன் மீது காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் துணை நடிகை சாந்தினி.

அந்த புகாரில் குறிப்பிடப்பட்டதாவது:

முன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன் என்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார். என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், என் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் மேலும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார்

- இவ்வாறு துணை நடிகை சாந்தினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இப்புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :