• JUST IN | சுட சுட

கோவையில் அதிகரிக்கும் கொரானா: சுகாதாரத் துறை அமைச்சர் ஆலோசனை!





தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 33,361 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19லட்சத்து 78ஆயிரத்து 621ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 22,289ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கோவையில் இதுவரை 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கோவை மாநகராட்சிப் பகுதியில் 56.77 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து பார்வையிட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கோவை செல்லவிருக்கிறார். அதற்கு முன் தலைமைச் செயலகத்தில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சிறப்பு அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக கோவையில் தொற்றை கட்டுப்படுத்தவும், வெண்டிலேட்டர் படுக்கைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :