• JUST IN | சுட சுட

4 புதிய சேவைகள் : இந்தியன் ஆயில் நிறுவனம் தொடக்கம்!





இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு புதிய சேவைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் அந்நிறுவனம் பதிவிட்டுள்ளதாவது:

இந்தியன் ஆயில் கம்பெனி புதிதாக 4 சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது. இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ், மிஸ்டு கால் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு சேவை, 5 கிலோ எடை கொண்ட சின்ன சிலிண்டர், காம்போ சிலிண்டர்களாக 14.4 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்கள் வழங்கல் என்று புதிதாக 4 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ் சிலிண்டர் அதிக செயல்திறன் கொண்டது என்பதால் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சமையலுக்கு உதவும்.

அடுத்தபடியாக வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எந்த செலவும் இல்லாமல் மிஸ்ட் கால் மூலம் நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.

எல்பிஜி வாடிக்கையாளர்கள் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து சிலிண்டரை புக் செய்யலாம்.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு காம்போ சிலிண்டர்களையும் வழங்கியுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவர்கள் 14.4 கிலோ சிலிண்டருடன் 5 கிலோ சிலிண்டரையும் பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர, சமையல் எரிவாயு அதிகம் தேவைப்படாதவர்களுக்காகவும், குடும்பத்தை விட்டு வெளியே தனியாக வசிக்கும் நபர்களுக்காகவும் 5 கிலோ குட்டி சிலிண்டர் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

_ இவ்வாறு இந்தியன் ஆயில் நிறுவனம் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :