• JUST IN | சுட சுட

ஸ்புட்னிக் -வி தடுப்பூசி : ஜூன் 2-ம் வாரத்தில் சென்னைையில் பயன்பாட்டுக்கு வருகிறது?





இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், கிறது, கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசி எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 35 நகரங்களில் மட்டுமே இந்த தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஹைதராபாத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜூன் 2-வது வாரம் முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :